ரசமணி மோசடிகள்

ரசமணி என்பது என்ன :

ரசமணி என்பது பாதரசத்தை மணி போல உருட்டி கட்டுவது. ஆதியில் இருந்து இன்று வரையிலும் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து நீர்ம நிலையில் உள்ள பாதரசத்தை கட்டியாக மாற்ற இயலாது என்பதே. ஆனால் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர் பெருமக்கள் பாதரசத்தை மணியாக கட்டி சாதனை புரிந்தனர். இதற்காக உலகமே சித்தர்களை பாராட்டவேண்டும். ஆனால் அதை இன்றைய போலி சித்தர்களும் தெரிந்து கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபடுவது வருந்த கூடிய செய்தி.

ரசமணி வகைகள் :

நான் ரசமணியை கற்றுகொண்ட போது ரசமணி பற்றி எனக்கு போதித்த சில செய்திகளை எழுதுகிறேன். ரசமணிகளில் முழுக்க முழுக்க மூலிகை சாற்றினாலோ, அல்லது துருசு (மயில் துத்தம்) மற்றும் மூலிகை சாறு பயன்படுத்தியோ அல்லது செயநீர்கள் தயாரித்தோ அல்லது எலி, அட்டை, மண்புழு  போன்றவைகளை கொண்டும் செய்யப்படுகின்றது. இங்கு கடைகளில் காணப்படும் ரசமணிகள் அனைத்தும் வெள்ளியம் கலந்த ரசமணியாக, மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணியாக மற்றும் வெறும் மூலிகை சாற்றினால் செய்யப்படும் ரசமணியாக இருகின்றன.

ரசமணி இரண்டு வகைப்படும்.

 1. நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி.
 2. நெருப்புக்கு ஓடாமல் நிக்கும் ரசமணி

நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி :

 மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணிகள், வெறும் மூலிகைகள் கொண்டு செய்யப்படும் ரசமணிகள் ஆகியவை நெருப்புக்கு நிக்காமல் ஓடும் ரசமணிகள். அதாவது பாதரசத்தை மேல் சொன்னபடி மயில் துத்தம் கொண்டோ அல்லது வெறும் மூலிகைகள் கொண்டோ ஏதாவது ஒரு முறையில் மணியாக கட்டி பின்பு அதை ஒரு இரும்பு உருக்கு களத்தில் வைத்து உருக்கும் போது அவை உருகி நிற்குமே தவிர, மீண்டும் மணியாக வராது. அதாவது மற்ற உலோகத்தை போல  தானாகவே இறுகாமல் நீர்ம   நிலையிலே இருக்கும். இவைகள் நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி ஆகும்.

வெள்ளியம் கலந்த ரசமணி :

வெள்ளியம் கலந்த ரசமணி அடிப்படை ரசமணிகளில் ஒன்று. கடைகளிலும், கோவில் திருவிழாக்களிலும் விற்கப்படும் ரசமணிகள் வெள்ளியத்துடன் பாதரசம் கலந்த ரசமணிகளே பெரும்பாலும் அதிகம் விற்கப்படுகிறது.

வெள்ளியம் கலந்த ரசமணி செய்முறை :

40% வெள்ளியத்தை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கி அதில் 60% பாதரசத்தை ஊற்றினால் அவை வெள்ளியத்துடன் இறுகி ரசமணியாக மாறுகிறது. இதுதான் கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது. இதன்  அளவு  இப்படிதான் இருக்கவேண்டும் என்று இல்லை. நம் வசதிக்கு ஏற்ப வெள்ளியத்தை குறைத்து பாதரசத்தின் அளவை கூட்டிக்கொள்ளலாம். இதே போல வெள்ளியிலும் செய்யலாம். இது எனக்கு சொல்லப்பட்ட முதல் ரசமணி. வியாபார நோக்கதிற்காக இத்தகைய ரசமணிகள் உருவாக்கப்படுகின்றன.இதன் விலை 150 முதல் 300 வரை இருக்கும். வெள்ளியம் என்ற உலோகம் சல்ரிங் செய்ய பயன்படும் உலோகம் ஆகும். அதைகொண்டு செய்யலாம். இதில் சித்தர்கள் சொன்ன இயல்பான சக்தி உண்டே தவிர புதிய சக்திகள் ஏற்ற முடியாது.

சித்தர்களின் ரசமணி :

சித்தர்களின் ரசமணி என்பது நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணிகளில் ஒன்று. அதன் செய்முறையை காணலாம்.

சித்தர்களின் ரசமணி :

ரசமணி செய்முறைகளில் எளிமையான முறைகளில் ஒன்று சித்த ரசமணி. இதற்க்கு விராலி என்ற மூலிகை தேவை மற்றும் துருசு சுண்ணம் தேவை.
ஒரு பாத்திரத்தில் விராலியிலையை நறுக்கி அதில் துருசு சுண்ணத்தை போட்டு மூடிவைத்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதில் அந்த மூலிகையின் சாறு இறங்கி இருக்கும். அந்த சாறை ஒரு இரும்பு கரண்டியில் ஊற்றி, அதற்குள் தேவையான பாதரசத்தை ஊற்றி, எரியும் தீயில் அந்த இரும்பு கரண்டியை வைக்க, அதில் உள்ள பாதரசம் கட்டும். தேவையான மட்டும் உருட்டிக்கொள்ளலாம். இதற்க்கு தேவையான சக்திகளை ஏற்றலாம். இது ரசமணியே அன்றி, குளிகை அல்ல. இப்படி செய்கின்ற ரசமணியின் விலை அதிகமாக இருக்கும்.

நெருப்புக்கு ஓடாத ரசமணி :

நெருப்புக்கு ஓடாத ரசமணி என்பது கட்டிய ரசமணியை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கும் போது உருகி பின்பு தானாகவே கட்டியாக மாறி விடும். இத்தகைய ரசமணிகள்தான் ரசவாதத்திற்கு உதவும். இதில் இருந்துதான் ரசவாத தங்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ரசமணிகள் எப்படி செய்வது. எப்படி செய்வது என்று எனக்கும் தெரியாது. ஆனால் இதை யாரிடமாவது கேட்டாலும் செய்துதருவது அரிது. இதை செய்வதற்கு செலவும் அதிகம். இதில் இருந்துதான் ரசமணி குளிகைகள் செய்ய முடியும். இப்படி செய்கின்ற ரசமணிகளுக்கு மட்டுமே நவபாசாணங்களான  9 வகையான பாசணங்கள், நவரத்தினகற்களான 9வகையான மணிகற்கள் , நவமூலிகைகளான 9 வகையான மூலிகைகள், மேலும் 64 வகையான உபரசங்கள் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாக சாரணை செய்ய சக்தி உள்ள ரசமணி குளிகையாக மாறும்.

ரசமணி வித்தைகளும் - மூடநம்பிக்கைகளும் :

ஏமாற்றுபவர்களும் - ஏமாறுபவர்களும் :

ஒரு நொடியில் ரசமணி :

பாதரசம் எப்படி ரசமணியாக மாறுகிறது :






தொடரும்....

4 comments:

vinothnewtricks said...

அய்யா வணக்கம் நீங்கள் சித்த ரசமணி செ ய்விிர்்களா

vinothnewtricks said...

அய்யா வணக்கம் நீங்கள் சித்த ரசமணி செ ய்விிர்்களா

Unknown said...

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளலாம்.
எனது மின் அஞ்சல் newtonrajaa@gmail.com

http://anbinvaasal.blogspot.com/ said...

எனக்கு என் குருநாதர் தந்த ரசமணி என்னிடம் நிறைய இருக்கிறது. வேண்டுமானால் பெற்றுக்கொள்ளுங்கள் தொடர்பு எண். 8807486978